பூமிக்கு ஆபத்தாக மாறியுள்ள செயற்கைக்கோள்கள்

எதிர்காலத்தில் பூமியில் விழும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விண்வெளியில் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்லிங்க் (Starlink) போன்று தற்போது தினமும் ஒன்று அல்லது இரண்டு செயற்கைக் கோள்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைகின்றன.
விண்வெளியில் தற்போது 8,000க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்கள் இருப்பதாக வானியற்பியல் நிபுணர் ஜோனதன் மெக்டோவெல் (Jonathan McDowell) தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில், ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX), அமேசான் (Amazon), சீனாவின் திட்டங்கள் மூலம் ஒவ்வொரு நாளும் 5 செயற்கைக் கோள்கள் பூமியில் விழும் நிலைக்கு செல்லும் அபாயம் உள்ளது.
இந்த எண்ணிக்கையுடன் பூமியின் சுற்றுப்பாதையில் 30,000 செயற்கைக் கோள்கள் செயற்படுவதாக கணிக்கப்படுகிறது.
இந்த வளர்ச்சி கெஸ்லர் சிண்ட்ரோம் (Kessler Syndrome) எனப்படும் அபாயத்தை உருவாக்கக்கூடும்.
அதாவது, செயற்கைக் கோள்கள் மற்றும் பிற விண்வெளிக் குப்பைகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் மேலும் குப்பைகள் உருவாகி, செயற்கைக் கோள்கள் மற்றும் எதிர்கால விண்வெளி பயணங்கள் அனைத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறும்.
உலகளாவிய இணையத் தொடர்பை விரிவுபடுத்தும் ஸ்டார்லிங்க் (Starlink) போன்ற திட்டங்கள் ஒருபுறம் நன்மை தருகிறது.
எனினும், இது விண்வெளிப் பாதையில் நெரிசலை ஏற்படுத்தி, விண்வெளி போக்குவரத்து மற்றும் குப்பை மேலாண்மை என இரு முக்கிய பிரச்சனைகளை உருவாக்கி வருகின்றது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.