செய்தி

தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற வேண்டும்!

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொழுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகம் இன்று (09.08) கொழும்பில் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தது.

குறித்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மத்திய தொழுநோய் சிகிச்சை நிலையத்தின் பிரதம வைத்திய அதிகாரி சனத் தீபக்க,  கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 127 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “உண்மையில், இந்த நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு சுமார் 3-5 ஆண்டுகள் ஆகும். பலரின் உடலில் இந்த அறிகுறிகள் பல ஆண்டுகளாக இருக்கும். இருப்பினும் பெரும்பாலும் நோய் நிலைமை இனங்காணப்படுவதில்லை.

காரணம் இது மற்ற நோய்களைப்போல அரிப்பு, வலி ஏற்படுவதில்லை.  ஒரு கூச்ச உணர்வு மட்டுமே உள்ளது. இதைப் பொருட்படுத்தாமல், தினசரி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதை நீண்ட காலத்திற்கு கவனிக்காமல் இருக்கும்போது பாரிய விளைவுகள் ஏற்படுகின்றன.  விரல்கள் உதிர்ந்து காயங்கள் ஆறாத நிலையில், மக்கள் இதற்கு சிகிச்சை பெற முனைகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

(Visited 15 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி