இலங்கையில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
தற்போது நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.
அதன் பணிப்பாளரும், சமூக பல் மருத்துவ நிபுணருமான இஷானி பெர்னாண்டோ, இலங்கையில் ஏற்படும் மரணங்களுக்கு இரண்டாவது பொதுவான காரணியாக புற்றுநோய் உள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விசேட வைத்தியர் இஷானி பெர்னாண்டோ அந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
“இலங்கையில் மரணத்திற்கு இரண்டாவது முக்கிய காரணியாக புற்றுநோய் உள்ளது. பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் அறிக்கையின்படி 2019 இல் புற்றுநோயால் 15,599 பேர் உயிரிழந்துள்ளனர்.
2020 இல் 37,649 புதிய நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், புற்றுநோயின் அதிகரிப்பையும் நாம் காண்கிறோம். ஆண்களிடையே வாய் புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோயாகும்.
எனக்கு தெரிந்தவரை புகையிலை பயன்பாட்டை குறைக்க போதிய திட்டங்கள் இல்லை. பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் புரோஸ்டேட் புற்றுநோய் உள்ளது.
இது வயதுக்கு ஏற்ப உருவாகிறது. அதனால் மரணிக்காது. நம் நாட்டில் புகையிலைக்கு எதிராக அதிக வேலைத்திட்டங்களையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்…”