கரீபியன் கடற்பகுதிகளில் அதிகரிக்கும் இராணுவ பிரசன்னம் – வெள்ளைமாளிகையில் முக்கிய கூட்டம்!
கரீபியன் கடற்பகுதியில் அமெரிக்க இராணுவத்தின் பிரசன்னம் அதிகரித்து வருகின்ற நிலையில், இது தொடர்பில் வெள்ளைமாளிகையில் நேற்றைய தினம் முக்கிய கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வெனிசுலாவின் படகுகள் மீது இரண்டு மாதங்களாக நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து, விமானந்தாங்கி நீர்மூழ்கி கப்பல் ஒன்று கரீபியன் கடற்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பலில் 75 க்கும் மேற்பட்ட இராணுவ விமானங்களுடன் 5000இற்கும் மேற்பட்ட துருப்புக்கள் குறித்த கப்பலில் உள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில் அமெரிக்க உயர்மட்ட தலைவர்கள் இணைந்து நேற்றைய தினம் முக்கிய கூட்டங்களை நடத்தியுள்ளனர்.
வெனிசுலா மீது இராணுவ நடவடிக்கை எடுப்பதா இல்லையா என்பது குறித்து விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளதாகவும் CNA செய்தி வெளியிட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)





