இலங்கையில் அதிகரிக்கும் தோல் புற்றுநோயாளர்கள் : வைத்தியர்கள் எச்சரிக்கை!
இலங்கையில் கடந்த சில வருடங்களாக தோல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தோல் நோய் வைத்திய நிபுணர் டொக்டர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தோலில் பயன்படுத்தப்படும் பல்வேறு அழகுசாதனப் பொருட்களும் ஒரு காரணம் எனக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தோலை ப்ளீச் செய்வதன் ஊடாக சூரிய ஒளியில் இருந்து வரும் கதிர்களால் சருமம் நேரடியாக பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ள சத்தான உணவுகளை உண்ண வேண்டும் என்றும், தோலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் முறையான சிகிச்சைகளை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
(Visited 4 times, 1 visits today)