ஐரோப்பா

பரிஸ்-சீனாவுக்கு இடையே அதிகரிக்கும் விமான சேவைகள்!

பரிஸ்-சீனாவுக்கு இடையே இயங்கும் விமான சேவைகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுளளது.

அதற்கான கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இல் து பிரான்ஸ் மாகாண முதல்வரும், இல் து பிரான்சுக்கான பொது போக்குவரத்து துறை தலைவருமான Valérie Pécresse இந்த கோரிக்கையை பிரதமர் Élisabeth Borne இடம் முன்வைத்துள்ளார்.

பிரான்சுக்குள் வருகை தரும் சுற்றுலாப்பயணிகளில் பெரும்பாலானோர் சீனாவில் இருந்து வருகை தருகின்றனர். பில்லியன் யூரோக்கள் வரையான வருவாயை ஈட்டித்தரும் இந்த சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் இந்த கோரிக்கையை அவர் முன் வைத்துள்ளார்.

பரிசுக்கும் Beijing நகருக்கும் இடையே வாரத்துக்கு ஒரு விமானமும், பரிசுக்கும் Shanghai நகருக்கும் இடையே இரண்டு விமானங்களும், பரிசுக்கும் Hong Kong நகருக்கும் இடையே வாரத்துக்கு மூன்று விமான சேவைகளும் இயக்கப்படுகின்றன.

இதனை அதிகரிக்கும் படி கோரி பிரதமருக்கு கடிதம் ஒன்றை Valérie Pécresse அனுப்பியுள்ளார்.

(Visited 12 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்