இலங்கையர்களிடையே அதிகரித்து வரும் நோய்! மருத்துவர்கள் எச்சரிக்கை!
கண் பார்வையை சிதைக்கும் கெரடோகோனஸ் (Keratoconus) நோய் இலங்கையர்கள் இடையே அதிகரித்து வருவதாக தேசிய கண் மருத்துவமனை எச்சரித்துள்ளது.
கார்னியா (Cornea) அறுவை சிகிச்சை நிபுணர் ஆலோசகர் டாக்டர் குசும் ரத்னாயக்க இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு காலத்தில் அரிதாகக் கருதப்பட்ட இந்த நிலை இப்போது எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே கூட அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய அளவில் இதுவரை எந்த கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை என்றாலும், பெரும்பாலான நோயாளிகள் 10 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், இந்த கோளாறு பொதுவாக டீனேஜ் அல்லது முதிர்வயதின் ஆரம்பத்தில் ஏற்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நோயின் நிலை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சைகள் மாறுப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் ஆரம்பகாலத்தில் பரிசோதனைகளை மேற்கொள்வது இதனை தடுப்பதற்கான முதற்படியாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




