இலங்கையில் சுற்றுலாத்தளங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

தம்புள்ளை உட்பட இலங்கையில் காணப்படும் சுற்றுலாத்தளங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று காலை முதல் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, தம்புள்ளை ரஜமகா விகாரை, தம்புள்ளை உயவத்த ரஜமகாவிகாரை மற்றும் சுற்றுலாத்தளங்கள், உணவகங்கள் என்பவற்றில் விசேடப் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, அறுகம்பே பிரதேசத்தைச் சூழவுள்ள பாதுகாப்பு அபாயம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் தென் மாகாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
(Visited 22 times, 1 visits today)