செய்தி

திருகோணமலை நகர் பகுதிகளில் யாசகர்களின் வீதம் அதிகரிப்பு

திருகோணமலை நகர் பகுதிகளில் தற்போது யாசகர்களின் வீதம் அதிகரித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் காரணமாக தமது கஷ்டங்களை போக்குவதற்காக யாசகம் பெற்று வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இதே நேரம் வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்தவர்களே திருகோணமலை நகரில் யாசகம் அதிக அளவில் பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

கிழக்கு மாகாணத்திற்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்ற நிலையில் திருகோணமலைக்கு வருகை தந்து முக்கிய இடங்களை பார்வையிட்ட பின்னரே வேறு இடங்களுக்கு செல்கின்றனர்.

சுற்றுலா வருபவர்களிடம் யாசகர்கள் யாசகம் கேட்பதால் சுற்றுலா பிரயாணிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இவ்விடயத்தை கருத்தில் கொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

(Visited 7 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி