இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு !
இந்த மாதத்தின் முதல் 3 வாரங்களில் 109, 393 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட தரவுகளுக்கமைய, இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், 11 இலட்சத்து19, 642 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, ஜேர்மன், சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.





