இலங்கை உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் செப்டம்பர் 2023 முதல் அக்டோபர் 2023 வரை 23.2% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த டிசம்பர் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவானதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் இந்நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 3.57 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இதில், சீனா வழங்கிய 1.4 பில்லியன் நிதி வசதியும் இதில் அடங்குவதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
(Visited 9 times, 1 visits today)