கருவாடு, மாசி இறக்குமதி அதிகரிப்பு: நாமல் கடுப்பு!
மீன்பிடித்துறையைக் கட்டியெழுப்புவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.
“ நாட்டை மீட்பதற்கு கடல்வளங்கள்போதும் என ஆட்சியாளர்கள் அறிவிப்புகளை விடுத்துவந்தனர். ஆனால் இந்த ஆட்சியின்கீழ் கருவாடு மற்றும் மாசி இறக்குமதி அதிகரித்துள்ளது.
அதேபோல கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படவில்லை. மீனவ சங்கங்களுக்கு மத்தியிலும் கட்சி அரசியலை முன்னெடுப்பதற்கே முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன.” எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.




