பாரிஸில் Eiffel கோபுரத்தை பார்வையிடுவதற்கான கட்டணம் அதிகரிப்பு
பாரிஸிலில் அமைந்துள்ள Eiffel கோபுரத்தை பார்வையிடுவதற்கு பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 17 ஆம் திகதியிலிருந்து புதிய கட்டணம் நடப்புக்கு வரும் நிலையில் Eiffel கோபுரத்தை பார்வையிடுவதற்கு தற்போது கட்டணம் 29.40 யூரோவில் இருந்து 35.30 யூரோவுக்கு உயர்த்தப்படும்.
பாரிஸ் நகர மன்றம் நுழைவுச்சீட்டு கட்டணத்தை உயர்த்த ஒப்புதல் அளித்தது. கோபுரத்தில் மேற்கொள்ளப்படும் அவசரச் சீரமைப்புப் பணிகளுக்கான செலவைச் சமாளிக்க கட்டண உயர்வின் மூலம் கிடைக்கும் தொகை உதவும் என குறிப்பிடப்படுகின்றது.
19 கொரோனா தொற்றின்போது கோபுரத்தை பார்வையிட சென்ற சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. அதனால் கோபுர நிர்வாகத்துக்கு 120 மில்லியன் யூரோ பற்றாக்குறை ஏற்பட்டது.
புதிதாக சீரமைப்புப் பணிகளுக்கு 60 மில்லியன் யூரோ போதாது என்று கூறப்பட்ட நிலையில் நுழைவுக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.