நியூசிலாந்தில் விடாது பெய்த மழை : பிரதான சாலைகளில் போக்குவரத்து துண்டிப்பு!
நியூசிலாந்தின் டுனெடின் நகரத்தில் பல வருடங்களுக்கு பிறகு கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் முக்கிய வீதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை தொடங்கிய மழைக்குப் பிறகு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 80 க்கும் மேற்பட்ட மக்கள் அவசரகால முகாம்களில் இரவைக் கழித்ததாக தெற்கு தீவு நகரத்தின் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழை நிலைமை காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் 135,000 மக்கள் வசிக்கும் நகரம் டுனெடினுக்குள் மற்றும் வெளியே செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகள் வெள்ளம் காரணமாக மூடப்பட்டதாக கூறப்படுகிறது.
நிலச்சரிவு காரணமாக மற்ற சாலைகளும் மூடப்பட்டதாகவும், நிலைமைகள் கணிக்க முடியாதவை என்று உள்ளூர் அரசாங்க செய்தித் தொடர்பாளர் கிறிஸ் ஹென்டர்சன் கூறியுள்ளார்.