இலங்கையில் 70 வயது தந்தைக்கு மகள் செய்த செயல் – கைது செய்த பொலிஸார்

மாத்தளை, நாவுல பிரதேசத்தில் 70 வயது தந்தை மகளால் தாக்கப்பட்டுள்ளார்.
அவ்வாறு தாக்கியதாகக் கூறப்படும் மகள் கைது செய்யப்பட்டுள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.
29 வயதுடைய மகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது, இவர் ஆணொருவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ள நிலையில் அவரை வீட்டில் தங்க வைக்க முற்பட்ட போது தந்தை அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததினால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான தந்தை இது தொடர்பில் நாவுல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
(Visited 30 times, 1 visits today)