இலங்கை

இலங்கையில் இருவேறு இங்களில் இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

நாட்டின் இருவேறு இடங்களில் இரண்டு கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஜாலா பகுதியில் வாக்குவாதம் அதிகரித்து நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டார்.வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஓய்வு அறையில் மது அருந்திக் கொண்டிருந்த இரு கடை ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த கொலை நடந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலையை செய்த சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஜல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லகேகல பிரதேசத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு முற்றியதையடுத்து கணவரே இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.லகேகல, நாரங்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் லக்கல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், லக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்