இலங்கையில் திருமணத்திற்காக இளைஞன் தாயாருடன் இணைந்து செய்த மோசமான செயல்
ஓபத்த கொட்டுகுடா பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவரும் அவரது தாயாரும் ஜாஎல பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனது திருமணத்திற்குத் தேவையான பணத்தைத் தேடுவதற்காக கஞ்சா விற்பனை செய்தவரும் அவருக்கு உறுதுணையாக இருந்த தாயாருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களிடம் இருந்து 2 கிலோ 170 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
24 வயதுடைய சந்தேகநபருக்கு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. அதற்காக அவருக்கு 15 லட்சம் ரூபா தேவைப்பட்டுள்ளது. பணத்தைக் கண்டுபிடிக்க முறையான வழியில்லாததால் 5 லட்சம் ரூபாவை மினுவாங்கொட பகுதியில் கஞ்சா விநியோகஸ்தருக்கு செலுத்தி 3 கிலோ கஞ்சா வாங்கியதாக குறித்த இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.
தனது தந்தை வேலையில் இருந்து பெற்ற பணத்தை இதற்காக பயன்படுத்திய அவர், வாங்கிய கஞ்சாவை தனது நண்பருடன் சேர்ந்து தனது தாயின் உதவியுடன் சிறிய அளவில் விற்பனை செய்து வந்துள்ளார்.
குறித்த இளைஞன் கஞ்சா வாங்கிய 57 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்திய போது சம்பவம் தொடர்பில் தகவல் தெரியவந்துள்ளது.
பின்னர் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் கஞ்சா விற்பனைக்கு உதவிய இளைஞன் மற்றும் அவரது தாயாரை கைது செய்துள்ளனர்.
அப்போது அவர்கள் வாங்கிய 03 கிலோ கஞ்சாவில் ஒரு பகுதி விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.