வடகொரியாவில் இனி கணவரை ”ஒப்பா” என்று அழைக்க முடியாது – மீறி அழைத்தால் மரண தண்டனை!
தென்கொரிய மொழி அல்லது சொல்லகராதியைப் பயன்படுத்த வடகொரியா தடை விதித்துள்ளது. அவ்வாறு யாரேனும் பயன்படுத்தினால் அவர்கள் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் பேசப்படும் கொரிய மொழி மீதான தேசிய ஒடுக்குமுறையை வட கொரிய தீவிரப்படுத்தியுள்ளது.
இதன்படி தென்கொரிய மொழியை பேசினால், பியோங்யாங் கலாச்சார மொழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.
“ஏற்கனவே தென் கொரிய மொழி பேசும் முறையைப் பழக்கப்படுத்திய குடியிருப்பாளர்கள் இப்போது பியோங்யாங் பேச்சுவழக்கைப் பயிற்சி செய்ய வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வட கொரியப் பெண்கள் தங்கள் கணவர்களையோ காதலர்களையோ “ஜாகியா” அல்லது “ஒப்பா” என்று அழைக்க முடியாது. அதற்கு பதிலாக, அவர்கள் “டோங்ஜி” என அழைக்க வேண்டும் என அறிக்கையொன்று கூறுகிறது.