ஜேர்மனியில் அதிகாரிகளின் கவனயீனத்தால் நிகழ்ந்த அனர்த்தம் : மில்லியன் கணக்கான யூரோக்கள் நட்டம்!
ஜேர்மனியில் ஒரு புத்தம் புதிய தீயணைப்பு நிலையம் தீயில் எரிந்து நாசமானது. ஹெஸ்ஸியில் உள்ள Stadtallendorf தீயணைப்பு நிலையத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மில்லியன் கணக்கான யூரோக்கள் மதிப்பிலான உபகரணங்கள் தீயில் எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏறக்குறைய 20 மில்லியன் முதல் 24 மில்லியன் யூரோக்கள் வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, கட்டிடத்தில் தீ எச்சரிக்கை அமைப்பு நிறுவப்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.





