ஜெர்மனியில் கணவனை கொலை செய்ய மனைவி போட்ட திட்டம்
ஜெர்மனியில் பல மாதங்களாகக் கணவரின் கோப்பியில் குளோரின் ரசாயனத்தைக் கலந்து அவரைக் கொல்ல முயன்றதாகப் பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் Arizona மாநிலத்திலும், ஜெர்மனியிலும் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Roby Johnson என்ற நபர் தமது மனைவி Melody Felicano Johnson ஜெர்மனியில் வசித்தபோது, அன்றாடம் குடிக்கும் கோப்பியின் சுவை மோசமாக இருந்ததைக் கவனித்தார்.
நீச்சல்குளத்தின் நீரைச் சோதிக்கும் கருவிகளின் மூலம் காப்பிப் பாத்திரத்தில் அதிக அளவு குளோரின் ரசாயனம் (Chlorine) சேர்க்கப்பட்டதை ரோபி அறிந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
மனைவி காப்பி தயாரிக்கும் சாதனத்திற்குள் அறியாத திரவத்தை ஊற்றுவது ரகசிய கேமராவின் மூலம் ரோபிக்குத் தெரியவந்ததாகக் கூறப்பட்டது.
அமெரிக்க விமானப்படையில் பணிபுரியும் ரோபி, காப்பியைக் குடிப்பது போல் நடித்ததாகக் கூறினார்.
ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவுக்குத் திரும்பியதும் மனைவி மீது புகார் கொடுக்க அவர் திட்டமிட்டார்.
பின்னர் அமெரிக்காவிலும் மெலடி அதனைத் தொடர்ந்ததாகக் கூறப்பட்டது.
இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தபோதும் பிள்ளையோடு சேர்ந்து வசித்தனர்.
இறந்த பிறகு கிடைக்கவிருக்கும் அனுகூலங்களைப் பெற மெலடி தம்மைக் கொல்ல முயற்சி செய்ததாக ரோபி நம்புவதாகப் புலனாய்வாளர்கள் கூறினர்.