ஜெர்மனியில் சமூக உதவி பணத்தை 725 யூரோவாக வழங்குமாறு கோரிக்கை
ஜெர்மனி நாட்டில் சமூக உதவி பணம் 725 யுரோவாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் சமூக உதவி பணம் பெறுபவர்களுக்கு மாதாந்தம் 725 யுரோ வழங்கப்பட வேண்டும் என்று சமூக அமைப்பு ஒன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதாவது தற்பொழுது 502 யுரோவை தனி நபர் ஒருவர் பெற்றுக்கொண்டு வருவதாக தெரியயவந்துள்ளது.
இந்நிலையில் தற்பொழுது உணவு பொருட்களின் விலை ஜெர்மனியில் அதிகரித்து காணப்படுகின்றது.
கடந்த ஆண்டு உடன் ஒப்பிடும் போது பொருட்களின் விலையானது 17 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
அதனால் ஆக குறைந்தது 200 யுரோ வரை சமூக உதவிபணத்தை உயர்த்த வேண்டும் என அரசாங்கத்திடம் குறித்த அமைப்பு கோரிக்கையை முன்வைத்துள்ளது.
மேலும் மின்சார கட்டணத்தை இந்த சமூக உதவி பணத்திலேயே மக்கள் செலுத்தி வந்துள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் காலங்களில் இந்த மின்சார கட்டணத்தை செலுத்த கூடிய வகையில் அரசாங்கமானது இந்த நிதி உதவியை வழங்க வேண்டும் என்று இந்த அமைப்பானது கோரிக்கையை முன்வைத்துள்ளது.