பிரான்ஸில் மாணவி ஒருவருக்கு பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்தவரால் நேர்ந்த கதி

பிரான்ஸில் மாணவி ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கியபோது நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.
பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த ஒருவர் மாணவியைக் கத்தியால் குத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது.
18 வயதுடைய மாணவி ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
குறித்த மாணவியுடன் பேருந்தை விட்டு இறங்கிய மாணவன் ஒருவருக்கும் கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது.
தாக்குதலை மேற்கொண்டுவிட்டு ஆயுததாரி தப்பி ஓடி மறைந்துள்ளார்.
பின்னர் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இரண்டுமணி நேரம் கழித்து பிற்பகல் 3 மணி அளவில் அவரைக் கைது செய்துள்ளனர்.
தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
(Visited 46 times, 1 visits today)