பிரான்ஸில் 2,800 குழந்தைகளின் பரிதாப நிலை – வீதிகளில் உறங்கும் அவலம்
பிரான்ஸில் சுமார் 2,800 குழந்தைகள் சரியான உணவின்றி, உடுக்க உடையின்றி தினமும் வீதிகளின் ஓரங்களில், தாழ்வாரங்களில் உறங்கும் அவலம் நிலவுவதாக தெரியவந்துள்ளது.
அறக்கட்டளை அமைப்பு ஒன்று மேற்கொண்ட ஆய்வில், இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அனேகமாக வீடுகள் அற்று குழந்தைகளின் தாய்மார்கள், குழந்தைகள் கல்விகற்கும் சிறுவர்கள் பாடசாலைகளின் முன்னால் கூடாரங்கள் போன்று கிடைத்த பொருட்களால் கூடாரம் அமைத்து தங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.
காரணம் அவர்களின் குழந்தைகள் அங்கேயே கல்வி கற்பதால் சக மாணவர்களின் பெற்றோர்கள் உணவு, உடை என அவர்களுக்கு தேவையான சில உதவிகள் வழங்கி வருவதே காரணம் எனவும் தெரிவித்துள்ளது.
வீடற்றவர்களுக்கு உதவுவதற்காக அரசால் அறிவிக்கப்பட்ட 115 இலக்கத்திற்கு அழைத்தும் எந்தவொரு பயனும் கிடைக்கவில்லை.
பிரான்ஸில் அகதிகளை அதிகம் வரவேற்கிறோம் எனக் கூறி அகதிகளை உள்வாங்கி, ஆணடொன்றுக்கு 60% சதவீத அகதிக் கோரிக்கைகளை நிராகரித்துவிட்டு, அவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பாமல், அரச உதவிகளை மட்டும் நிறுத்தி, அவர்களை வீதியில் விடுவதே இந்த நிலைக்கு காரணம் என அறக்கட்டளை அமைப்பு அரசின் மேல் குற்றம் சாட்டி உள்ளது.