அளவிற்கு அதிகமானால்… விஷமாகும் தண்ணீர்
உடலை ஆரோக்கியமாகவும், உள்ளேயும் வெளியேயும் வலுவாகவும் வைத்துக் கொள்ள, சரியான அளவு தண்ணீர் குடிப்பதும், நீரேற்றத்துடன் இருப்பதும் அவசியம். அதனால்தான், கோடை காலத்தில் மட்டுமல்லாது, மழை மற்றும் குளிர் காலங்களிலும் நிறைய தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
ஆனால் அளவிற்கு அதிக தண்ணீர் குடிப்பதால் நீங்கள் நோய்வாய்ப்படக் கூடும். ஆம், அதிகமாக தண்ணீர் குடிப்பதால் வாட்டர் பாய்சனிங் அல்லது வாட்டர் டாக்ஸிசிட்டி எனப்படும் நோயை உண்டாக்கும்.
ஒரு நபர் ஒரு குறுகிய காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்கும் போது, சிறுநீரகங்களில் தண்ணீர் அதிக அளவில் சேரத் தொடங்குகிறது. சிறுநீரகங்கள் இந்த கூடுதல் திரவத்தை வடிகட்டுவது கடினமாகி, தண்ணீர் விஷமாகிவிடும் சூழ்நிலை ஏற்படுகிறது.
அளவிற்கு அதிக தண்ணீரால், உடலில் உள்ள சோடியம் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலை சீர்குலைந்து, நபர் தீவிரமாக நோய்வாய்ப்படத் தொடங்கும் நிலை ஏற்படும்
அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால், மயக்கம், வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். கூடுதலாக, கடுமையான தலைவலி மற்றும் கடுமையான தசைப்பிடிப்பு இருக்கலாம்.
அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால், சிந்திக்கும் சக்தியும், புரிந்துகொள்ளும் சக்தியும் குறையத் தொடங்குகிறது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
நீர் நச்சுத்தன்மையை எளிதில் தவிர்க்கலாம். நாள் முழுவதும் சீரான இடைவெளியிலும் சிறிய அளவிலும் தண்ணீரைக் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஜிம்மிற்குச் செல்பவர்கள் அல்லது அதிக உடல் பயிற்சிகளை செய்பவர்கள் தங்கள் பயிற்சியாளர் மற்றும் மருத்துவரின் ஆலோசனையின்படி தண்ணீர் குடிக்க வேண்டும்.