பிரித்தானியாவில் பழைய முறையில் தேர்தல் – கைகளால் எண்ணப்படும் வாக்குகள்
பிரித்தானியாவில் தேர்தல் வாக்களிப்புக்கு இம்முறை இயந்திரங்கள் பயன்படுத்தாமல் பழைய முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் வாக்குச்சீட்டில் பென்சிலைப் பயன்படுத்தியுள்ளனர். வாக்குகளை எண்ணுவதற்கும் இயந்திரங்கள் இல்லை. அவை கைகளில் எண்ணப்பட்டுவருகின்றன.
வாக்குப் பெட்டிகளைத் திறந்ததும் அவை அஞ்சல் வாக்குகளுடன் சேர்த்துக் கலக்கப்படுகின்றன. பின்னர் அவற்றை எண்ணும் பணி தொடங்குவதாகக் கூறப்படுகிறது.
அதிகாலை 3 மணி வரை இன்னும் பல இடங்களின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. எதிர்கட்சியான தொழிற்கட்சித் தலைவர் கெர் ஸ்டாமரின் (Keir Starmer) லண்டன் தொகுதிக்கான இடமும் அதில் அடங்கும்.
அதன் பிறகு வாக்குகளை எண்ணும் வேலைகள் இன்னும் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் 200க்கும் அதிகமான இடங்களுக்கான முடிவுகள் வெளிவரலாம்.
பிரித்தானிய நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் எந்தக் கட்சி வெற்றி பெறும் தருவாயில் இருக்கிறது என்பதை அறிவிக்கப் போதுமான முடிவுகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.