பிரித்தானியாவில் செகண்ட் ஹேண்ட் சந்தைகளில் நூதனமாக ஏமாற்றப்படும் மக்கள்!
பிரித்தானியாவில் செகண்ட் ஹேண்ட் சந்தைகளில் அதிகளவு மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும், பெரும்பாலான மக்கள் ஏமாற்றப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
நுகர்வோர் இதழ்/இணையதளம், 1,300 வாங்குபவர்களில், 32 சதவீதமானோர் செகண்ட் ஹேண்ட் சந்தைகளால் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சந்தைகள் மூலம் நுகர்வோர் வெற்று பொதிகளை பெற்றுக்கொள்ளுதல், அல்லது தவறான பொதிகளை பெற்றுக்கொள்ளுதல் போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கணக்கெடுக்கப்பட்டவர்களில் 57 சதவீதமானோர் டெபாப்பில் ஒரு மோசடியை அனுபவித்ததாகக் கூறியுள்ளனர்.
இந்நிலையில் விற்பனையாளரின் மதிப்புரைகள் மற்றும் சுயவிவரத்தை மக்கள் சரியாகச் சரிபார்ப்பது முக்கியம் என வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





