செய்தி

அமெரிக்காவில் குடும்பத்தினர் வீட்டுக்குள் இருக்கும்போதே வீட்டுக்குத் தீ வைத்த உரிமையாளர்

அமெரிக்காவில் குடும்பத்தினர் வீட்டுக்குள் இருக்கும்போதே வீட்டுக்குத் தீ வைத்த வீட்டு உரிமையாளரை நியுயார்க் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாடகை பாக்கி விவகாரத்தால் ஆறு குழந்தைகள் உட்பட எட்டு பேர் கொண்ட குடும்பத்தினர் குறித்த சந்தர்ப்பத்தில் வீட்டிற்குள் இருந்துள்ளனர்.

வீட்டில் தீ பரவிய போதும் தீயணைப்பு வீரர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். 66 வயதான ரபீக் இஸ்லாம் என்பவர் புரூக்ளினில் தனக்கு சொந்தமான கட்டடத்தைத் தீ வைத்தார்.

அந்த வீட்டின் இரண்டாம் தளத்தில் 8 பேர் குடியிருந்தனர்.வாடகை பாக்கி வைத்திருந்ததால் ரபீக் ஆத்திரம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

வீட்டை காலிபண்ண வலியுறுத்தியும் குடியிருந்தவர்கள் காலி செய்ய மறுத்ததால் அவர் வீட்டுக்குத் தீ வைத்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!