ஆப்கானிஸ்தானில் 10 வயது குழந்தைகள் பாடசாலை செல்லத் தடை!
ஆப்கானிஸ்தானில் 10 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளின் பள்ளிக் கல்வியைத் தடை செய்ய தலிபான்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தடை ஏற்கனவே நாட்டின் பல மாகாணங்களில் அமுலில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாடசாலைகளிலோ அல்லது கல்வி நிலையங்களிலோ சேர்க்க வேண்டாம் என தலிபான்கள் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகு, தலிபான்கள் பெண்களின் கல்வி உரிமை உட்பட பல உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர், மேலும் பெண்கள் அழகு நிலையங்கள், ஜிம்கள் மற்றும் பூங்காக்களுக்குச் செல்வதைக் கூட தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 7 times, 1 visits today)