பாகிஸ்தானில் ஒன்றுக்கூடிய இம்ரான் கான் ஆதரவாளர்கள் : நூற்றுக்கணக்கானோர் கைது!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்கக் கோரி நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் இன்று (25.11) தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஒன்றுக்கூடியுள்ளனர்.
இதில் பல ஆதரவாளர்ள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுக்க அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக பாதுகாப்புப் பூட்டுதலை அமல்படுத்தியுள்ளனர்.
இம்ரான் கான் பாராளுமன்றத்தில் உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அணிவகுத்துச் செல்ல அழைப்பு விடுத்தார். அதே நேரத்தில் நகருக்குள் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இஸ்லாமாபாத்தில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களைத் தடுக்க அரசாங்கம் கப்பல் கொள்கலன்களைப் பயன்படுத்திaதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அதிகாரிகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.





