ராணுவத்துடன் நிபந்தனை பேச்சுவார்த்தைக்கு தயாராகும் இம்ரான் கான்
பாகிஸ்தானின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நாட்டின் சக்திவாய்ந்த ராணுவத்துடன் “நிபந்தனைப் பேச்சுவார்த்தைகளை” நடத்தத் தயாராக இருப்பதாகவும், பேச்சுவார்த்தைக்கு ஒரு பிரதிநிதியை நியமித்துள்ளதாகவும் தெரிவித்துளளார்.
“இராணுவத் தலைமை அதன் பிரதிநிதியை நியமித்தால் நாங்கள் நிபந்தனைக்குட்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்துவோம்” என்று கானின் அதிகாரபூர்வ X பக்கத்தின் ஒரு பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகளில் ஒன்று “சுத்தமான மற்றும் வெளிப்படையான” தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், தனது ஆதரவாளர்கள் மீதான “போலி” வழக்குகள் கைவிடப்பட வேண்டும் என்றும் கான் தெரிவித்துள்ளார்.
(Visited 4 times, 1 visits today)