சிறையில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி சித்திரவதை செய்வதாக இம்ரான் கான் குற்றச்சாட்டு
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், சிறையில் தன்னையும் தனது மனைவியையும் மன ரீதியாக சித்திரவதை செய்வதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
72 வயதான முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரான் கான், பல வழக்குகளில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அல்-காதிர் டிரஸ்ட் வழக்குகளில் இருவரும் தண்டிக்கப்பட்ட பிறகு, அவரது மனைவி புஷ்ரா பிபியும் அவருடன் சிறையில் அடைக்கப்பட்டார்.
“சிறையில் எனக்கும் புஷ்ரா பேகத்திற்கும் அளிக்கப்படும் மனரீதியான சித்திரவதையை அசிம் முனீர் செய்கிறார், மேலும் எங்களை அடிபணிய வைப்பதே அவரது ஒரே நோக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.





