செய்தி

நியூசிலாந்தில் அனுமதியின்றி குடியேற்ற ஆலோசனைகளை வழங்கினால் சிறைத்தண்டனை

அனுமதியின்றி குடிவரவு ஆலோசனைகளை வழங்கி அதற்கான பணத்தை பெற்றுக்கொள்ளும் மோசடியாளர்களை தண்டிக்கும் புதிய முறையை நடைமுறைப்படுத்த நியூசிலாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, உரிமம் இல்லாமல் குடிவரவு ஆலோசனை வழங்குவோருக்கு 9 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க நியூசிலாந்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், குற்றவாளிகளுக்கு 1,600 நியூசிலாந்து டொலர்கள் அபராதம் விதிக்க ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அனுமதியின்றி குடியேற்ற ஆலோசனைகளை வழங்கிய நியூசிலாந்து நாட்டவர்கள் 3 பேர் இது தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி செயற்பட்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்தேக நபர்கள் நியூசிலாந்து சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய குடியேற்றவாசிகளை குறிவைத்து இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இவர்கள் நியூசிலாந்து வீசாவைப் பெறுவதற்காக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்ளுமாறும், குடிவரவு அறிவுறுத்தல்களுக்கு முரணாக சட்டவிரோதமாக தங்கியிருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

10 வருடங்களுக்கும் மேலாக சந்தேக நபர்கள் புலம்பெயர்ந்தவர்களை இலக்கு வைத்து இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

ஆலோசனை வழங்குவதற்கு சட்டப்படி அனுமதி பெற்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி