இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் மூலம் வர்த்தகர்களுக்கு கிடைத்த பாரிய இலாபம்!

2023ஆம் ஆண்டு இலங்கைக்கு வெங்காயத்தை இறக்குமதி செய்த வர்த்தகர்கள் சுமார் 8,000 கோடி ரூபாவை சட்டவிரோதமாக இலாபம் ஈட்டியுள்ளதாக வழிவகைகள் குழுவில் தெரியவந்துள்ளது.
அந்தக் குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இது தொடர்பான அறிக்கைகளை இன்று (01.04) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உண்மைகளை தெளிவுபடுத்தினார்.
இதேவேளை, இலங்கை சுங்கம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் கலால் திணைக்களம் என்பன அரசாங்கத்திற்கு 1,066 ரூபாய் வரிகள் வசூலிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்திய 4,479 பேரிடம் உரிய வரி வருமானத்தை வசூலிக்காமல், நாட்டின் ஒட்டுமொத்த மக்களிடமிருந்தும் பால் மா, சீனி, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு VAT வரி விதிப்பது நியாயமானதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)