சாப்பிட்ட உடன் தவிர்க்க வேண்டிய முக்கிய விடயங்கள்
சாப்பிட்ட உடனே எந்த உணவுகளை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம்.
சாப்பிடுவது என்றாலே நம் அனைவருக்குமே பிடித்தது தான். ஆனால் ஒரு சிலர் சாப்பிட்ட உடனே ஒரு சில உணவுப் பொருட்களை சேர்த்து சாப்பிடுவார்கள். அதை ஒரு பழக்கமாக கூட வைத்துக் கொள்வார்கள் இதனால் பல பின் விளைவுகள் உள்ளது. அதைப்பற்றி இங்கே தெரிஞ்சுக்கலாம்.
பழங்கள்;
சாப்பிட்ட உடனே பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் . ஏனென்றால் பழங்கள் எளிதில் ஜீரணிக்கக் கூடியது ஆனால் உணவு ஜீரணிக்க 3-4 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். இந்த நிலையில் சாப்பிட்ட உடனே பழங்கள் சாப்பிடுவதால் ஜீரணம் கோளாறு ஏற்படும் .
இது ஜீரணத்தை தாமதப்படுத்துவதோடு வயிறு உப்பசம், மந்தம், போன்றவற்றை ஏற்படுத்தும் .மேலும் பழங்களில் இயற்கையாகவே இனிப்பு சுவை இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கப்படுகிறது .அதனால் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு அல்லது காலையில் வெறும் வயிற்றில் பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது.
தண்ணீர்;
சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் நாம் சாப்பிட்ட உடனே அந்த உணவு ஜீரணமாக வயிற்றில் அமிலங்கள் சுரக்கப்படும். நாம் தண்ணீர் குடித்து விட்டால் அந்த அமிலத்தின் பிஹெச் மதிப்பு மாறிவிடும். இதனால் சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
குளித்தல்;
சாப்பிட்ட உடனே குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் சாப்பிட்ட உணவு ஜீரணிக்க வயிற்றுப் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் நாம் குளித்தோமே ஆனால் வெப்பநிலை குறைந்து உடல் குளிர்ச்சி அடையும் இதனால் செரிமான உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைக்கப்படும்.
டீ ,காபி;
சாப்பிட்ட உடனே டீ காபி அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இதில் அமிலத்தன்மை உள்ளது. டீ யில் டானிக் ஆசிட் இருப்பதால் இது உணவில் உள்ள இரும்புச்சத்து குடல் உறிஞ்சுவதை 87 சதவீதம் தடுக்கிறது .இதனால் அனிமியா ஏற்பட வாய்ப்புள்ளது.
புகைப்பிடித்தல்;
ஒரு சிலருக்கு சாப்பிட்ட உடனே புகை பிடிக்கும் பழக்கம் இருக்கும் .இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும் .ஏனென்றால் பொதுவாக புகை பிடித்தால் ஏற்படும் பாதிப்பை விட பத்து மடங்கு அதிகமாகும். மேலும் இதில் உள்ள நிக்கோட்டின் உணவு குழாய் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும்.
தூக்கம்;
சாப்பிட்ட உடனே படுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது நெஞ்செரிச்சல், எதுக்களிப்பு, புளித்த ஏப்பம் ,அசிடிட்டி போன்றவற்றை ஏற்படுத்தும். சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து தான் படுக்க வேண்டும்.
உடற்பயிற்சி;
சாப்பிட்ட உடனே உடற்பயிற்சி செய்வதையும் தவிர்க்க வேண்டும் .ஏனென்றால் ரத்த ஓட்டம் கை பகுதிகளுக்கு அதிகமாக செல்லும் வயிற்றுப் பகுதிக்கு ரத்த ஓட்டம் செல்வது குறைவாக இருக்கும். இதனால் உணவு ஜீரணம் ஆவது தாமதமாகும். மேலும் கடினமான வேலைகளையும் செய்வதை தவிர்க்க வேண்டும்.
இவற்றில் உங்களுக்கு எந்த பழக்கம் இருக்கிறதோ அதை நிறுத்த முயற்சி செய்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள்.