கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இன்று (18) முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வரும் அனைவரும் உடனடியாக வளாகத்துக்குள் அழைக்கப்படுவார்கள் என குடிவரவு – குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நெரிசல் நிலை தொடர்பில் கருத்து தெரிவித்த குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய, கடவுச்சீட்டு பெறும் முறையில் ஜூன் மாதம் முதல் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் பல தரகர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடவுச்சீட்டை அரசாங்க தபால் திணைக்களத்திலிருந்து மூன்று நாட்களுக்குள் வழங்குவதற்கான ஆரம்ப வேலைகளை தயார் செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
(Visited 16 times, 1 visits today)





