இஸ்ரேலில் தங்கியிருக்கும் அமெரிக்கர்களுக்கு முக்கிய அறிவித்தல்!
இஸ்ரேலில் தங்கியிருக்கும் அமெரிக்கர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுடான வளர்ந்துவரும் மோதல்களால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜெருசலேமில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் தெஹ்ரானுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகள் எவ்வித தீர்வும் இன்று நிறைவுற்றுள்ள நிலையில், அமெரிக்கா மத்திய கிழக்கில் தங்களது இராணுவ தளங்களை அமைத்து வருகிறது.
இதற்கிடையே ஈரானும் தாங்கல் தாக்கப்பட்டால் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்களைத் தாக்குவதாக அச்சுறுத்தியுள்ளது.
வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பல நாடுகள் மத்திய கிழக்கின் சில இடங்களிலிருந்து இராஜதந்திர பணியாளர்கள் மற்றும் அத்தியாவசியமற்ற ஊழியர்களை திரும்பப் பெற தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





