ஜெர்மனியில் கடவுச் சீட்டு – அடையாள அட்டை தொடர்பில் முக்கிய அறிவிப்பு
ஜெர்மனியில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இருந்து கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டை பெறுவது தொடர்பாக புதிய விதி முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதாவது புதிதாக அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பம் செய்வருகளுக்கு அரசாங்கத்துடைய பிரத்தியேக தபால் பெட்டியில் இவர்களுக்கான அடையாளம் அட்டை தொடர்பான தகவல்கள் அனுப்பப்படும் என்றும்
சில வேளையில் இவர்களுடைய அடையள அட்டையோ அல்லது கடவுச் சீட்டோ இந்த போஸ்ட் பொக்ஸ் என்று சொல்லப்படுகின்ற அரசாங்கத்துடைய தபால் பெட்டியில் வைக்கப்படும் என்றும்
மேலும் பிரத்தியேகமாக ஒரு குறியீட்டு இலக்கம் ஒன்றும் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
இந்த குறியீட்டு இலக்கத்துக்கு அமைய கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டையை இதில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் இவ்வாறு விண்ணப்பதாரிகள் இலகுவான முறையில் அடையாள அட்டை மற்றும் கடவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்காகவே இந்த நடைமுயை அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு முதல் அடையாள அட்டையோ அல்லது கடவுச் சீட்டை எடுக்கின்றவர்கள் தமது படத்தை டிஜிடல் முறை மூலமாகவே அரச நிர்வாகத்துக்கு அனுப்ப கூடிய வகையில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரியவந்துள்ளது.