இலங்கையில் ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06, 07 ஆம் திகதிகளில் இடைநிறுத்தப்படும் என பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த திகதிகளில் ஏனைய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 10 times, 10 visits today)