சிங்கப்பூரில் புதிய வேலைகளுக்கு விண்ணப்பிக்க காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
சிங்கப்பூரில் புதிய வேலைகளுக்கு அனுமதி விண்ணப்பங்களை சமர்பிப்போருக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில் கல்வித் தகுதிகளை சரிபார்க்க 12 பின்னணி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய வேலை அனுமதி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முதலாளிகள், செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் விண்ணப்பதாரர்களின் டிப்ளமோ மற்றும் உயர்கல்வித் தகுதிகளின் சரிபார்ப்புச் சான்றிதழையும் வழங்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.
அதற்காக Compass என்னும் மதிப்பீடு கட்டமைப்பின் கீழ் புள்ளிகள் வழங்கப்படும் என்றும் அப்போது சொல்லப்பட்டது. ஊழியர்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது ஒவ்வொருவரின் தகுதிகளையும் ஒருமுறை மட்டுமே முதலாளிகள் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னணி நிறுவனங்களிடமிருந்து சரிபார்ப்பு ஆதார சான்றுகளை செப்டம்பர் 1 க்கு முன்பாக மனிதவள அமைச்சகம் ஏற்றுக் கொள்ளும். மனிதவள அமைச்சக இணையதளத்தில் பட்டியலிட்டுள்ள வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றன் மூலமாக அந்த ஆதாரச் சான்றுகளை பெறலாம்.
காம்பஸின் கீழ் முன்னர் பரிசீலிக்கப்படாத தற்போதைய வேலை அனுமதிகளை புதுப்பிக்க செப்டம்பர் 1, 2024 முதல் ஆதாரச் சான்று தேவைப்படும். அடுத்தடுத்த புதுப்பித்தல்களுக்கு சான்று தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.