இலங்கை

இந்திய விசாவிற்கு விண்ணப்பிக்கவுள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி முதல் இந்தியாவிற்கான விசா, கடவுச்சீட்டு வழங்குதல் உள்ளிட்ட தூதரக சேவைகளை நேரடியாக கையாளவுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் X தளத்தில் இட்டுள்ள பதிவில்,  விசா தொடர்பான விஷயங்களைக் கையாளும் வெளிப்புற நிறுவனம் அக்டோபர் 31 ஆம் திகதி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், கண்டி உதவி உயர்ஸ்தானிகராலயம் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள துணைத் தூதரகம் ஆகியவற்றினால் குறித்த சேவைகள் நேரடியாக கையாளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முன் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள், நியமன நடைமுறைகள் மற்றும் விரிவான வழிகாட்டுதல்களுக்கு http://hcicolombo.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

https://x.com/SriLankaTweet/status/1983717190395424874

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்