இலங்கை செய்தி

ஜனாதிபதிக்கும் பசிலுக்கும் இடையில் முக்கியச் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் 3 விடயங்கள் தொடர்பில் முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அரசியலமைப்பு வாக்கெடுப்பு ஒன்று அறிவிக்கப்படும் வரை, ஜனாதிபதி வேட்புமனு தொடர்பில் எவ்வித முரண்பாடுகளும் இன்றி பொதுவான சவால்களை வெற்றிகொள்ளும் நோக்கங்களை முதன்மைப்படுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டும் என இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அரசாங்கத்தின் பொது விவகாரங்களில் உத்தியோகபூர்வமாக பங்கேற்பதற்கான சந்தர்ப்பத்தை முன்னாள் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு ஏற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் குறித்தும் கலந்துரையாடப்பட்டு வருவதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கட்சி என்ற ரீதியில் தவறான முன்னுதாரணங்களுக்கு இடமளிக்க முடியாது என்பது பொதுஜன பெரமுனவின் பொதுவான தீர்மானம் எனவும், எனவே அந்த தவறான முன்னுதாரணம் தொடர்பாக எடுக்க வேண்டிய உத்தியோகபூர்வ நடவடிக்கையில் கட்சி ஏற்கனவே இறங்கியுள்ளதாகவும் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

(Visited 14 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை