உயிர்கள் வாழக் கூடிய புதிய கிரகம் குறித்து வெளியான முக்கிய தகவல்

உயிர்கள் வாழ்வதற்கு சாதகமான சூழலுடன் கூடிய புதிய கிரகமான “சூப்பர் எர்த்” பற்றிய ஆய்வு அறிக்கைகளை அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ளது.
இந்த புதிய கிரகத்திற்கு “TOI-715 b” என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் இது பூமியில் இருந்து 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது ஒரு சிறிய சிவப்பு நட்சத்திரத்தை சுற்றி வருவதாகவும், இது சுமார் 19 நாட்கள் எடுக்கும் என்றும் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பூமியை விட ஒன்றரை மடங்கு பெரிய இந்த கிரகம் குறித்து நாசா மேலும் ஆய்வுகளை நடத்தி வருகிறது.
(Visited 14 times, 1 visits today)