சிங்கப்பூரில் வாகன வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

சிங்கப்பூரில் வாகன வைத்திருப்பவர்களுக்கு மற்றுமொரு நெருக்கடியாக உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் மேலும் உயரக்கூடும் என்று கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மின் கார்கள், குறிப்பாகச் சீனாவிலிருந்து வரும் மின் கார்களுக்கான தேவை கூடுவதால் வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் தயாராகும் மின் கார்கள் சிங்கப்பூர்ச் சந்தையில் நுழைய முயன்றுவருகின்றன.
இவ்வாண்டின் முதல் பாதியில் சிங்கப்பூரில் புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட மின் வாகனங்களில் 40 சதவீதத்திற்கு அதிகமானவை சீனாவின் BYD நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை.
இவ்வாண்டு பிற்பாதியில் சொகுசு ரக மின் கார்களை சிங்கப்பூரில் அறிமுகம் செய்ய BYD நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
(Visited 36 times, 1 visits today)