ஜெர்மனியில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

ஜெர்மனியில் எதிர்வரும் ஜெர்மனியில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல் முதலாம் திகதி முதல் புதிய கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கு டிஜிட்டல் புகைப்படம் தேவைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அச்சிடப்பட்ட புகைப்படங்கள் இனி ஏற்றுக்கொள்ளப்படாது.
இவ்வாறான பயோமெட்ரிக் புகைப்படம் அலுவலகத்தில் உள்ள ஒரு சிறப்பு இயந்திரத்திலோ அல்லது உரிமம் பெற்ற புகைப்படக் கலைஞராலோ எடுக்கப்படும்.
பின்னர் அது கிளவுட் மூலம் அதிகாரிகளுக்கு நேரடியாக அனுப்பப்படும்.
இந்த மாற்றம் கடவுச்சீட்டு செயல்முறையை எளிதாக்குவதற்கும் காகிதங்களை குறைப்பதற்கும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கடைசி நேர சிக்கல்களைத் தவிர்க்க நாட்டு மக்கள் கடவுச்சீட்டு காலாவதி குறித்த மின்னஞ்சல் நினைவூட்டல்களையும் கோரலாம்.
அரசு அலுவலகங்களில் உள்ள சுய சேவை நிலையங்களில் மக்கள் புகைப்படங்கள், கைரேகைகள் மற்றும் கையொப்பங்களை டிஜிட்டல் முறையில் எடுக்கலாம்.
கடவுச்சீட்டுக்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வீட்டிற்கு நேரடியாக அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு அலுவலகத்திற்குச் சென்று நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இனி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.