ஜெர்மனியில் பல் சிகிச்சைக்காக செல்லும் மக்களுக்கு முக்கிய தகவல்
ஜெர்மனியில் பல் வைத்தியர்கள் பாவித்து வருகின்ற இரசாயன பொருளை பாவிக்க கூடாது என ஐரோப்பிய ஒன்றியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது பற்களில் துளை ஏற்பட்டு இருந்தால் அதை மூடுவதற்கு அமல்கம் என்று சொல்லப்படுகின்ற ஒரு ரசாயன பொருளை பல் வைத்தியர் பயன்படுத்துகின்றார்கள்.
இந்நிலையில் தற்பொழுது ஐரோப்பிய ஒன்றியமானது இந்த அமல்கம் என்ற சொல்லப்படுகின்ற இரசாயன பொருட்களை பற்களில் துளை ஏற்படும் பொழுது அதனை அடைப்பதற்கு பயன்படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இவ்வகையான ஒரு முடிவுக்கு ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நடைமுறையானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதலில் இருந்து அமுல்படுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக இந்த அமல்கம் என்று சொல்லப்படுகின்ற இந்த ரசாயன பொருட்களானது இதுவரை காலமும் 15 வயதுக்கு உட்பட்ட மகப்பேற்றை எதிர்ப்பார்த்து இருக்கின்ற தாய் மார்களுக்கு பயன்படுத்த கூடாது என்பது சட்டமாக காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த இரசாயன பதார்த்தமானது உடல் ஆரோக்கியத்துக்கு பாதகமான விளைவை ஏற்படுத்த கூடியது என்று ஐரோப்பிய ஒன்றியம் கருதுகின்றது.