ஜெர்மனியில் சமூக உதவி பெறும் மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்
ஜெர்மனி நாட்டில் சமூக உதவி பணத்தில் வாழும் மக்களுக்கு சில நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதாவது சமூக உதவி பணத்தை பெற்று வாழ்ந்து வருகின்றவர்கள் நடைமுறைகளை கடைப்பிடிக்கப்படாத பட்சத்தில் கொடுப்பனவுகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்படுகின்றது.
ஜெர்மனியில் சமூக உதவி பணத்தில் பெறுகின்ற ஒருவர் சமூக உதவி திணைக்களமானது இவருக்கு ஒரு நியமனத்தை வழங்கியுள்ளது.
இந்த நியமனத்துக்கு சமூக உதவி பணத்தை பெறுகின்றவர்கள் செல்லாது விட்டால் அவர்களுக்கு வழங்குகின்ற சமூக உதவி பணத்தில் சில குறைப்புகளை மேற்கொள்வது நடைமுறையில் உள்ளகட்டப்பட்ட விடயமாகும்.
இதேவேளையில் ஜெர்மனியில் தொழில் அமைச்சர் வுபேர்ட்டஸ் ஹைல் அவர்களின் பணிப்பின் பெயரில் ஜொப் சென்டருக்கு சில விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அதாவது எவர் ஒருவர் தனது சமய பண்டிகையை முன்னிட்டு இந்த ஜொப் செண்டர் என்று சொல்லப்படுகின்ற சமூக உதவி திணைக்களத்தினால் வழங்குகின்ற நியமனத்துக்கு அவர் செல்லாது விட்டால் சமூக உதவி திணைக்களமானது இந்த விடயத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என்ற பணிப்புறையை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனால் சமூக உதவி பணம் பெறுகின்றவர்கள் குறித்த நியமனத்தை விளங்கி கொள்வதுடன் அதனை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளது.