சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய தகவல்
சிங்கப்பூரில் நிலத்தை வாங்க விரும்பும் வெளிநாட்டினர் அரசாங்க அனுமதியைப் பெற வேண்டும்.
நேற்று முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிப்பட்டுள்ளது.
அதாவது கலப்பு வணிக மற்றும் குடியிருப்பு பயன்பாட்டிற்கான சொத்து அல்லது நிலத்தை வாங்க விரும்பும் வெளிநாட்டினர் சிங்கப்பூர் அரசாங்க அனுமதியை பெறுவது இனி அவசியமாகும்.
சட்ட அமைச்சகம் மற்றும் சிங்கப்பூர் நில ஆணையம் குடியிருப்பு சொத்து சட்டத்தை (RPA) மாற்றியமைத்துள்ளதாக அறிவித்துள்ளன.
குடியிருப்புகளைக் கொண்ட கடைவீடுகள் மற்றும் சில வணிக நிலையங்களை உள்ளடக்கிய கலப்பு வணிக மற்றும் குடியிருப்பு வீடுகள், இதற்கு முன்பு குடியிருப்பு அல்லாத சொத்தாக பட்டியலிடப்பட்டன.
ஆனால், இனி அவை குடியிருப்பு சொத்துக்கள் என்ற பட்டியலின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆகையால் அவை குடியிருப்பு சொத்துக்கள் சட்டத்தின்கீழ் இனி வரும் என்பதனால் அரசாங்க அனுமதியை பெறுவது இனி அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.