ஜெர்மனியில் ஓய்வூதிய வயது குறித்து வெளியான முக்கிய தகவல்
ஜெர்மனியில் ஓய்வூதியம் பெறும் வயது பற்றிய விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் வேலை செய்யும் ஒருவர் 45 வருடங்கள் ஓய்வு ஊதியத்துக்காக தமது மாதாந்த பங்களிப்புக்களை செலுத்தி இருந்தால்,
அவர் 63 வயதில் தமது ஓய்வு ஊதிய பணத்தை பெற முடியும்.
இந்நிலையில் இந்த ஓய்வு ஊதிய தொகையானது 65 வயதில் ஓய்வு ஊதியத்தை பெறுகின்ற தொகையை விட 14.4 சதவீதம் குறைந்த தொகையை இவர் ஓய்வு ஊதியமாக பெற முடியும்,
இந்நிலையில் தற்பொழுது ஜெர்மனி அரசாங்கத்தின் கூட்டு கட்சியான FDP கட்சியானது,63 வயதில் ஓய்வு ஊதியத்தை பெறுகின்ற திட்டத்தை தாம் முற்றாக ரத்து செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதாவது கட்சி கூட்டத்தின் போது பேரரணை நிறைவேற்றப்பட்டது, இந்த பேரரணையின் போது ஓய்வு ஊதியம் தொடர்பில் சில விடயங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதாவது ஜெர்மன் அரசாங்கத்திற்கு 63 வயதில் ஓய்வு ஊதியம் பெற செல்லும் பொழுது பல பில்லியன் யுரோக்கள் மொத்தமாக செலவிடப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பல லட்சக்கணக்கான மக்கள் 63 வயதில் ஓய்வு ஊதியத்தை பெற ஆர்வம் காட்டி வருவதால் அரசாங்கத்திற்கு பல நட்டங்கள் ஏற்பட்டுள்ள காரணத்தினால் இவ்வகையான மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று ஜெர்மனியின் பிரதான கட்சியிடம் வேண்டுதலை விடுத்துள்ளது.
இதன் காரணத்தினால் 63 வயதில் ஓய்வு ஊதியத்தை பெறும் நிலையில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.