இலங்கையில் வரிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கியத் தீர்மானங்கள்!
இலங்கையில் வரிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கியத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மக்கள் செலுத்தும் வெட் வரியை அரசாங்கத்திற்கு முறையாக கிடைக்கப்பெறுகிறதா? என்பதை உறுதி செய்ய ஒரு முறைமையை தயார் செய்யுமாறு கோபா குழு, உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
கோபா குழுவினால் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடம் முன்னெடுத்த விசாரணையின் போது இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது சுமார் 13,000 நிறுவனங்கள் வெட் வரிக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான வரியை அரசாங்கத்திற்கு செலுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்களிடம் இருந்து வெட் வரியை வசூலிக்கும் நிறுவனங்கள் சரியான முறையில் வரிகளை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுக்கும் முறைமையொன்றை தயாரிக்க வேண்டும் என கோபா குழு இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.
2019, 2020, 2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தற்போதைய செயற்பாடுகளை விசாரணை செய்வதற்காக கோபா குழு கடந்த 15 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.