ஜெர்மனியில் பணிக்கு செல்லாத பெற்றோர்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம்
ஜெர்மனியில் பணிக்கு செல்லாது இருக்கும் பெற்றோர்கள் தமது குழந்தை வளர்ப்புக்காக பெற்றுவருகின்ற நிதி தொடர்பாக பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது.
ஜெர்மனியில் குழந்தைகள் பிறந்து அவர்களை பராமரிப்பதற்காக பெற்றோர் பணிக்கு செல்லாது விடுமுறையில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற பணத்தில் ஓர் மாற்றம் ஒன்று கொண்டு வரப்பட இருக்கின்றது.
பாராளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பாக சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டு இருந்தது
அதாவது இதுவரை காலங்களும் இவ்வாறு எல்டன் கில்ட் ஐ பெறுவதற்கு தாய் மற்றும் தந்தையர் வருமானமானது வருடம் ஒன்றுக்கு 3 லட்சத்துக்கு மேற்பட்டு இருந்தால் அவர்களில் ஒருவர் இந்த எல்டன் கில்ட் என்ற பணத்தை பெற தகுதியுடையவர்களாக இருந்தார்கள்.
இந்நிலையில் தனி நபர் ஒருவராக இருந்தால் அவர் தனது பிள்ளையை பராமரிப்பதன் விடயம் தொடர்பாக பணிக்கு செல்லாது விட்டால் அவருடைய மொத்த வருமானமானது 250000 யுரோவாக இருந்தால் அவரும் இந்த எல்டன் கில்ட் என்று சொல்லப்படுகின்ற பணத்தை பெற முடியாத நிலை உள்ளது.
இதேவேளை தற்பொழுது ஜெர்மனியின் குடும்ப நல அமைச்சர் பவுஸ் அவர்கள் இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் புதிய சட்ட நகலை தாக்கல் செய்து இருந்தார்.
இந்த புதிய சட்ட நகல் படி எல்டன் கில்ட் ஐ பெறுவதற்கு தாய், தந்தையுடைய வருமானமானது வருடம் ஒன்றுக்கு 150000 யூரோவிற்கு மேற்பட்டு இருந்தால் எல்டன் கில்ட் ஐ பெற முடியாது என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.